சத்யேமவ ஜெயதே!

அமீர் கான் தொகுத்து வழங்கும் டி.வி. ஷோ... நாடெங்கும் மாதக்கணக்கில் நிகழ்ந்த புரொமோஷன் கள்... அநேகமாக, ஓப்ரா வின்ஃப்ரே ஷோ பாணியில் இந்தியப் பிரபலங்கள் அனைவரையும் பேட்டி எடுப்பார் அமீர் என்பது போன்ற எதிர்பார்ப்புகள் இருந்த சூழலில், அத்தனையையும் அடித்து நொறுக்கி, புது பரிமாணத்தில் அசரவைத்திருக்கிறது 'சத்ய மேவ ஜெயதே’ ஷோ!   ஒரு சமூகப் பிரச்னை, அதனால் பாதிக் கப்பட்டவர்கள், பிரச்னை மீது வெளிச்சம் பாய்ச்சிய போராளிகள், பாதிக்கப்பட்டவர் களுக்கு நீதி கிடைக்கச் செய்யக் காரணமாக இருந்தவர்கள், அந்தப் பிரச்னையை வெவ் வேறு கோணங்களில் அணுகும் ஆய்வாளர் கள், பிரச்னைக்கான தீர்வு, அதற்கான வழிகாட்டுதல்கள் என்று அத்தனை நேர்த்தி. 'வளவள’ விவாதங்களை மட்டும் அடுக்காமல், இரண்டு மூன்று 'கேஸ் ஸ்டடி’, சில வீடியோ க்ளிப்பிங்ஸ், இடை இடையே நிபுணர்களின் கருத்துகள் என சூப்பர் பேக்கேஜ்! முதல் அத்தியாயத்தில், பெண் சிசுக் கொலையைப் பற்றி அலசினார் அமீர். ''யாருகிட்ட வேணும்னானும்   கேளுங்க  உங்களுக்குப் பிடிச்சவங்க யாருனு... எல்லோரும் தயங்காமல் சொல்வாங்க 'அம்மானு!'' '' என ஷோவை ஆரம்பித்து வைத்தார் அமீர்.பெண் சிசு என்றால் 'ஜெய் ஸ்ரீ துர்கா ’என்றும் , ஆண் சிசு என்றால் 'ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா என்றும்ருத்துவர்களும் தாயின் உறவினர்ளும் பயன்படுத்தும் சங்கேத வார்த்தைகள் , அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்  எணும் மருத்துவ இயந்திரம் எப்படியெல்லாம் சிசுக் கொலைக்கு உதவுகிறது என்பதைப் பற்றி ஒருருத்துவர் சொல்லும்  தகவல், கிராமப்புற மக்களைவிட படித்த, மதிப்பான பணியில் இருக்கக் கூடியநகர மக்கள்தான் அதிகமாகப் பெண் சிசுக் கொலை செய்கிறார்கள் எனும் ஆய்வு முடிவுகள் , தொடர்ந்து பெண் குழந்தைகளைய பிரசவித்ததால் பர்வின் கான்க்கு ஏற்பட்ட பாதிப்பை  அவர் முலம் சொல்ல வைப்பது  எனக்  கண்ணீரை வரவழைக்கும்  கொந்தளிக்கத் தூண்டும், தீர்வு தேடச்செய்யும் நிகழ்ச்சி.
ராஜஸ்தான் மாநில ருத்துவர் எவ்வாறு பெண் சிசு கருக்கைலப்புக்கு உடந்தையாகச் செயல்படுகிறார்கள் என்பதை வெளிபடுத்தும் 'ஸ்டிங் ஆபேரஷன் கள் இடம்பெரும் அதே ஷோவில்,பஞ்சாப் மாநிலத்தின் நவான்ஷார் மாவட்டத்தின் துணை ஆணையர்  கிருஷ்ணகுமார் எப்படி பெண் சிசுக் கொலைப் பிரச்னையே முடிவுக்குக் கொண்டுவந்தார் என்பதைம் வெளிச்சமிடுகிறார்கள்.
அந்த அத்தியாயம் ஒளிபரப்பான பிறகு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட் , வீடியோ பதிவில்சிக்கிய ருத்துவர்கள்,மருத்துவமனைகள் மீது  நடவடிக்கை எடுக்க இருப்பதாக அறிவிக்க , அவரைச்சந்தித்து  நிலைமையைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டுகோள் வைத்திருக்கிறார் அமீர்..
இப்படியான சமுக அவலங்ளேப் பற்றிய விவரங்கைளச் சேகரிக்க மட்டும் இரண்டு ருடங்கள் 'கிரௌண்ட் வொர்க் ’ செய்திருக்கிறது சத்யேமவ ஜெயதே டீம் .
இரண்டாவது அத்தியாயத்தில் இன்னும் அதிரவைக்கும் பிரச்னை. சிறார் பாலியல் வன்கொடுமைபற்றிய பகீர் பக்கங்களைத் தயக்கச் சுவர் உடைத் பாதிக்கப்பட்டவர் களைப் பேசைவத்தார் அமீர்.பெண்குழந்தைளுக்கு நிகராக ஆண் குழந்தைளும் இயற்கைக்கு மாறான வல்லுறவுக்கு ஆளாக்கப்படும் கொடுமையப் பெற்றோர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் அதிர்ச்சியுடன் பட்டியலிட்டார்கள்.நிலைமையின் விபரதத்தைச் சொன்னதோடு நிற்காமல்,அதை மிக  எளிமையாகக் கையாளும் வழிமுறைகளும் சொல்லிக் கொடுத்ததுதான் ' சத்யேமவ ஜெயதே ' வை  மற்ற அனைத்து  டாக்-ரியாலிட்டி ஷோக்களில் இருந்தும் வித்தியாசப்படுத்துகிறது..
குழந்தைகளுக்கு 'குட் டச் ’, ' பேடு டச் ’பற்றி எப்படிப் பாடம் எடுப்து, அந்நியர் எவரும் 'டோன்ட் ட்ச் ’ இடங்களில் தொட்டால் 'ஓஓஓ...’ என்று கத்திவிடுங்கள் என்று எளிமையாகக் குழந்தைளை அபாயத்தை எதிர்கொள்ளப் பழக்குவது எனத் தவறயே விடக் கூடாத அம்சங்க ளுடன் கலைகட்டுகிறது நிகழ்ச்சி. ஷோவின் நடுடுவே பெண் சிசுவுக் குக் காரணமாக இருப்பது  தந்தையின் உயிர் அணுக்களில் உள்ள குரோமோசொமேகள்தான் என்று மேதாலாசம் காட்டிக்கொள்வது , ' சல்மானைச் சுத்தி நிறையப் பெண்கள் இருக்காங்க ...யாரைக் கல்யாணம் பண்ணிக்கிறதுனு தெரியாம இருக்காரு ...’ என்று குறும்பு செய்வது கேட்க்வே ரொம்ப கஷ்டமா இருக்குங்க..'என்று நெகழ்வது.அவ்வப்போது  தரையில் உட்கார்ந்து கொண்டு உரையாடுவது எனத் தொலைகாட்சி  வர்ணைனயாளர்களுக்குப் புது உடல் மொழி இலக்கணம் மே  கற்றுக் கொடுக்கிறார் அமீர்.
நர்மதா அணைப் போராட்டத்தில் மேதா பட்கருடன் பங்கேற்றது  , டிஸ்லெக்சியா குறைபாடுள்ள குழந்தைகள் பற்றி 'தாரா ஜமீன் பர்படம் இயக்கியது , 'இந்தியா எர்த் ஹவர் நிகழ்ச்சியில் கையில் மெழுகுவத்தியுடன் பங்கேற்று  புவி வெப்பமயமாதல் பற்றி விழிப்பு உணர்வை  ஏற்படுத்தியது  , அண்ணா ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது  என ஸ்டார்டம் விரும்பாத அமீரின் சமுகச் செயல் பாடுகளின் அடுத்த  பாய்ச்சல் இது!சமுக அக்கறை என்ற அளவுக்குஎல்லாம் செல்ல வேண்டாம் ... குறைந்தபட்சம் உங்கள் குடும்பத்தின் மீது  அக்கறை  ருந்தாலேனும் இந்த ஷோவை நீங்கள் மிஸ் செய்யமாட்டீர்கள்.
சத்யேமவ ஜெயதே!



நன்றி ......

ஆனந்த விகடன்




Comments

Popular posts from this blog

மறத்தமிழன் சிறப்பு

'கடவுள் அணு’வும் சிவனின் நடனமும்! – எஸ்.குருமூர்த்தி