திருந்த வேண்டியது மடங்களா.. ? மனங்களா.. ?
தொலைக்காட்சியில் வெளியான
நித்தியானந்தா சுவாமிகளின் நித்திய ஆனந்த லீலா வினோதங்களால் தமிழக கர்நாடகா பக்தகோடிகளெல்லாம் அல்லோலப் பட்டனர்
32 வயதேயான நித்தியானந்தா தமிழகத்தின் திருவண்ணாமலையில் பிறந்தவர்.
33 நாடுகளில் 1200 மையங்கள்,
அமெரிக்க இந்துப் பல்கலைக்கழகத்தின் தலைவர், பெங்களூருக்கு வெளியேமைசூர் சாலையில் 200 ஏக்கர் பரப்பளவில் தலைமைப் பீடம்.
பெரும் செல்வாக்கு,
கொட்டும் பணம்.
எப்படி சம்பாதித்தார் இவற்றையெல்லாம்....???
அனைத்தும் மக்களின் மடத்தனத்தின் மேல் எழுப்பப்பட்ட சொத்தும் புகழும் []
லிங்கம் எடுத்தல், விபூதி எடுத்தல்
என்ற சில்லறை சமாச்சாரத்திற்கு
விடை கொடுத்துவிட்டு
சாமியாரின் பேச்சிலும், எழுத்திலும்
வெளிப்பட்ட வசீகரத்திற்கு
வசியப்பட்டுப்போன பக்தகோடிகள்
கோடிகளைக் கொட்ட
சாமியாருக்கு ஜோடியும் தேவைப்பட்டது.
குமுதத்தில்
கதவைத் திற காற்று வரட்டும் கட்டுரையை எழுதியவரின் அந்தரங்கக் கதவைத்
திறந்து பார்த்த யாரோ ஒருவர் அதனைப் படம் பிடித்து தொலைக்காட்சிக்கும்
அனுப்பிவிட நித்திய அனுபவங்கள் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
பிரம்மச்சரியத்தைக்
கட்டுப்படுத்துவது எவ்வாறு என்று எழுதியவர் உணர்ச்சிகளின் உந்து சக்தியால்
சிற்றின்பத்தை தகாத முறையில் உய்த்து உணர்ந்தார். பாவம் பக்தகோடிகள்..
இவரின் கட்டுரையைப் படித்து பண்பட முயன்றவர்கள் திண்டாடிப் போயிருப்பார்க்ள்.
காஞ்சிக்
காமக்கோடியின் காமக்களியாட்டங்களும், கொலைக் குற்றமும் வெளிப்பட்ட பிறகும்
வாழாவிருந்த சங்க்பரிவார்களுக்கு நித்யானந்தாவின் நிழலுலக அனுபவங்களைக்
கண்டவுடன் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.
மனிதனை
மனிதன் என்ற நிலையில் பார்க்காமல் அவன் காட்டும் சில வித்தைகளால்
உச்சத்தில் தூக்கிவைத்துக் கூத்தாடிவிட்டு அவனது ரகசிய செய்கைகள்
வெளிப்படுத்தப்படும் பொழுது நிலைகுலைந்துப் போகின்றனர் இந்த அறிவிலிகள்.
இறைவன் யார்?
மனிதனை..,
இறைவன் எதற்காகப் படைத்தான்?
அவனுக்கும் மனிதனுக்குமிடையே
இடைத்தரகர்கள் தேவையா?
தான் படைக்கப்பட்டது ஏன்?
என்பதைப் பற்றி உணராததன் காரணமாக
அறியாமை
என்னும் அந்தகாரத்தில் மனிதர்களில் சிலர் மண்டியிட்டுக் கிடப்பதனை சாதகமாக
பயன்படுத்திக் கொண்டு சில அல்ல.., பல புல்லுருவிகளும் புரோகித வேடம்
பூண்டு பணம் சம்பாதிக்கவும், பாலியல் சுகத்தை அனுபவிக்கவும் தலைப்பட்டு
விடுகின்றனர்.
இத்தகைய சூழலைப் பயன்படுத்திக் கொண்டு
கடவுளை
மறுக்கிறோம் எனக்கூறும் கூட்டம் ஒன்று ஒழிக்கப்பட வேண்டியவை எவை மடங்களா?
மதங்களா? என பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றது.
கடவுளின்
பெயரால் நடைபெறும் அநாகரீகங்களும், அநியாயங்களும் சமூகத்தில்
அங்கீகரிக்கப்படுவது எதனால்? என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
இத்தகைய ஒழுக்கச் சீரழிவுகளுக்கு முடிவுகட்ட வேண்டுமென்றால் தனது அறிவுக்கு
சிறிது வேலையைக் கொடுக்க மனித சமூகம் தயாராகவேண்டும்.
இயற்கைக்கு
புறம்பான நிலையில் பிரம்மச்சரியத்தை கட்டுப்படுத்துகிறோம் என்ற மோசடித்
தனத்திலிருந்து விடுபட்டு இல்லற வாழ்க்கையின் மூலமே மனிதன் முழுமனிதனாக
முடியும் என்று கூறும் மனிதத் தன்மைக்கு ஏற்ற கொள்கையை ஏற்க மனிதர்கள்
தயாராக வேண்டும்.
மனித
உள்ளங்கள் இத்தகைய இருள்களிலிருந்து எப்பொழுது விடுதலையடைந்து தன்னைப்
படைத்த உண்மையான இறைவனை உணரத் தலைப்படுகிறதோ அன்று இத்தகைய மடங்களெல்லாம்
காணாமல் போய்விடும். ஆகவே திருந்த வேண்டியது மடங்களல்ல மக்களின்
மனங்களேயாகும்.. இன்னும் நாம் விழிக்காமல் இருந்தால் இவர்களைப் போன்றவர்கள்
மதுரை ஆதீனதுக்கு மட்டும் வர மாட்டார்கள் .
நாளை அரசியலுக்கு வரவும் வாய்ப்பு உள்ளது
சிந்தி ! செயல் படு !!
பாமரன்
Comments
Post a Comment