அன்னையர் தினம்
சிறு வயதில் ஏற்பட்ட காய்ச்சலால் காது சரியாக கேட்காத பையன் ஒரு நாள் பள்ளி
முடிந்து வீடு திரும்பினான். அவன் கையில் பள்ளியிலிருந்து கொடுக்கப்பட்ட
ஒரு குறிப்பு தாள் இருந்தது. 'உங்க பையன் ஒரு முட்டாள். அவனால், படிக்க
முடியாது!' என எழுதியிருந்தது.
'என் பையன் Tom படிக்கத் தெரியாத முடியாத முட்டாள் இல்லை! அவனுக்கு நானே பாடம் கற்றுக் கொடுக்கிறேன்' என அந்தப் பையனின் தாயார் சபதம் எடுத்தார். அதையும் செயல்படுத்தினார்.
Tom இறந்த பல ஆண்டுகள் கழித்து அமெரிக்க மக்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாடு முழுவதும் மின் விளக்குகளை ஒரு நிமிடத்திற்கு அணைத்தார்கள். மின் விளக்கு மட்டுமல்ல, ஆயிரமாயிரம் கண்டுபிடிப்புகளை தன் ஆராய்ச்சியின் வழி அவர் உருவாக்கியுள்ளார்.
அவர்தான் தோமஸ் அல்வா எடிசன்!! "என் மீது என் அன்னை அளவிட முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். அதனால், அவருக்கு ஏமாற்றத்தைத் தரக் கூடாது என உறுதியுடன் செயல்பட்டதாலேயே இவ்வளவையும் என்னால் சாதிக்க முடிந்தது" என்கிறார்.
இன்னும் பல சாதனையாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் அன்னையர் அனைவருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள் :)
Comments
Post a Comment