சத்யேமவ ஜெயதே!
அமீர் கான் தொகுத்து வழங்கும் டி.வி. ஷோ... நாடெங்கும் மாதக்கணக்கில் நிகழ்ந்த புரொமோஷன் கள்... அநேகமாக, ஓப்ரா வின்ஃப்ரே ஷோ பாணியில் இந்தியப் பிரபலங்கள் அனைவரையும் பேட்டி எடுப்பார் அமீர் என்பது போன்ற எதிர்பார்ப்புகள் இருந்த சூழலில், அத்தனையையும் அடித்து நொறுக்கி, புது பரிமாணத்தில் அசரவைத்திருக்கிறது 'சத்ய மேவ ஜெயதே’ ஷோ! ஒரு சமூகப் பிரச்னை, அதனால் பாதிக் கப்பட்டவர்கள், பிரச்னை மீது வெளிச்சம் பாய்ச்சிய போராளிகள், பாதிக்கப்பட்டவர் களுக்கு நீதி கிடைக்கச் செய்யக் காரணமாக இருந்தவர்கள், அந்தப் பிரச்னையை வெவ் வேறு கோணங்களில் அணுகும் ஆய்வாளர் கள், பிரச்னைக்கான தீர்வு, அதற்கான வழிகாட்டுதல்கள் என்று அத்தனை நேர்த்தி. 'வளவள’ விவாதங்களை மட்டும் அடுக்காமல், இரண்டு மூன்று 'கேஸ் ஸ்டடி’, சில வீடியோ க்ளிப்பிங்ஸ், இடை இடையே நிபுணர்களின் கருத்துகள் என சூப்பர் பேக்கேஜ்! முதல் அத்தியாயத்தில், பெண் சிசுக் கொலையைப் பற்றி அலசினார் அமீர். ' ' யாருகிட்ட வேணும்னானும் கேளுங்க உங்க ளு க்குப் பிடிச்சவங்க யா ரு னு . .. எல் லோ ரு ம் தயங்காமல் சொ ல்வாங்க ' அம்மா ’ னு !...