Posts

Showing posts from July, 2012

'கடவுள் அணு’வும் சிவனின் நடனமும்! – எஸ்.குருமூர்த்தி

Image
‘கடவுள் அணு’ என்று விஞ்ஞானிகளால் செல்லமாக அழைக்கப்பட்ட, எல்லா அணுக்களிலும் நுண்ணியதும், ஆதாரமானதுமான நுண்மையான அணுவை, சுமார் 14 ஆண்டுகள் முயற்சி செய்து, ஏறக்குறைய ரூ.20,000 கோடி செலவு செய்து, ஸ்விட்சர்லாந்து – பிரான்ஸ் நாட்டு எல்லையில் உருவாக்கப்பட்ட ‘செர்ன்’ என்கிற விஞ்ஞான ஆராய்ச்சி சாலை, அடையாளம் கண்டு விட்டதாக ஜூலை 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டபோது உலகமே வியந்தது. இந்த ‘கடவுள் அணு’ என்று அழைக்கப்படும் துண்டு அணுவுக்கு உண்மையான பெயர் ‘ஹிக்ஸ்-போசான்’ என்பது. இது இரண்டு விஞ்ஞானிகளுடைய பெயர்களின் இணைப்பு. இதில் ஹிக்ஸ் என்பது இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானியின் பெயர். இவர் இன்னும் உயிருடன் இருக்கிறார். 1998-ல் துவங்கிய இந்த விஞ்ஞான முயற்சி எல்லாவற்றுக்கும், 74 ஆண்டுகளுக்கு முன், 1924-ஆம் ஆண்டு பிள்ளையார் சுழி இட்டவர், நம் நாட்டு விஞ்ஞானியான கல்கத்தாவைச் சேர்ந்த சத்யேந்திரநாத் போஸ் என்கிற இளைஞர். 1894-ல் பிறந்த இவர், 1924-ஆம் ஆண்டு அணுவையும் அணுசக்தியையும் கண்டுபிடித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு, ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை அனுப்பினார். அப்போது அவருக்கு 30 வயது. அவரும் ஐன்ஸ்டீனும் சேர்...